ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வந்தது போலி… நகுல் வேதனை

சென்னை:
ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து ஏமாந்து விட்டேன் என்று நகுல் வேதனையுடன் டுவிட் போட்டுள்ளார்.

பாய்ஸ், காதலில் விழுந்தேன் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் நகுல். வளர்ந்து வரும் நடிகரான இவர் கைவசம் அதிக படங்கள் இல்லை.

இந்நிலையில் அவர் பிளிப்கார்ட் இணையத்தளத்தில் 1.25 லட்சம் ரூபாய்க்கு தன் மனைவிக்கு பரிசளிக்க ஒரு ஐபோனை வாங்கியுள்ளார்.
ஆனால் அது டெலிவரி செய்யப்பட்ட பிறகு தான் நகுலுக்கு தெரிந்துள்ளது, அது போலி என்று. உடனே அவர் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

இது பற்றி நகுல் டுவிட்டரில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!