ஆபாச மெசேஜ் அனுப்பினார்… இளம் பெண் புகாரில் பாடகர் கைது

துபாய்:
ஆபாச மெசேஜ் அனுப்பினார் என்று இளம் பெண் கொடுத்த புகாரில் பிரபல பாடகர் மிகா சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் பாடகர் மிகா சிங் ஒரு சர்ச்சையான புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு மிகா சிங் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அவரை துபாய் போலீஸ் கைது செய்துள்ளது.

அவர் துபாய்க்கு ஒரு நிகழ்ச்சியில் பாட சென்றிருந்த நிலையில் கைதாகியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சில வருடங்கள் முன்பு பிரபல நடிகை ராக்கி சாவந்த்துக்கு மேடையில் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கியவர் தான் இந்த மிகா சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!