ஆயிரம் பொற்காசுகள் படத்தின் ‘கொக்குக்கு கோவக்கா’ பாடல் வீடியோ!

வித்தார்த், மைனா படத்தில் கதாநாயகனாக நடித்து, அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர். சமீபத்தில் திரைக்கு வந்த “காற்றின் மொழி” திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவான பாராட்டை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அறிமுக இயக்குனர் ரவி முருகையா இயக்கத்தில் ‘ஆயிரம் பொற்காசுகள்’ என்ற படத்தில் வித்தார்த் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் வித்தார்த் உடன் இணைந்து சரவணன், ஜானவிகா, வெற்றிவேல் ராஜா ஆகியோரும் நடிக்கின்றனர். கேஆர் எண்டர்டெயின்ட்மன்ட் நிறுவனம் இத்திரைப்படத்தினை தயாரிக்க, ஜோஹன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஆயிரம் பொற்காசுகள் திரைப்படத்தின் ‘கொக்குக்கு கோவக்கா’ பாடல் வீடியோவை, விஜய் சேதுபதி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Sharing is caring!