ஆரண்ய காண்டம் படத்தில் 3 ஒளிப்பதிவாளர்கள்

ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ரவி கிருஷ்ணாவை வைத்து சில வருடங்களுக்கு முன் ஆரண்ய காண்டம் என்ற படத்தை இயக்கியவர் தியாகராஜன் குமார ராஜா.

இலங்கையை சேர்ந்த இவர், ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் குறிப்பிட்ட ஒரு சாரரின் பாராட்டுக்களைப் பெற்றார். விமர்சகர்களும் ஆரண்ய காண்டம் படம் குறித்து மாய்ந்து மாய்ந்து பாராட்டினார்கள். ஆனால் அப்படம் வணிக அளவில் வெற்றி பெறவில்லை.

அப்படத்தை தயாரித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண் மிகப்பெரிய நஷ்டமடைந்தார். ஆரண்ய காண்டம் வணிக வெற்றி பெறாததினால் இயக்குநர் தியாகராஜன் குமார ராஜாவுக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சிகளை செய்து வந்தார்.

நீண்ட முயற்சிக்குப் பிறகு ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் தியாகராஜன் குமார ராஜா. விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா நடித்துள்ள இந்தப் படத்தில் பி.சி.ராம், நீரவ்ஷா, பி.எஸ்.வினோத் என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்துள்ளனர்.

Sharing is caring!