ஆரண்ய காண்டம் 2019ம் ஆண்டு வெளியிட திட்டம்

ஆரண்ய காண்டம் என்ற ஒரே படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குனர் ஆனார் தியாகராஜன் குமாரராஜா. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இயக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி, பஹத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். விஜய்சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கேரக்டரில் நடிக்கிறார். இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது பின்னணி இசை கோர்ப்பு, டப்பிங், எடிட்டிங் பணிகள் நடந்து வருகின்றன. அக்டோபர் மாதம் படம் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் படத்தை 2019ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் படத்தை மேற்கு தொடர்ச்சி மலை படம் போன்று உலக பட விழாக்களுக்கு முதலில் அனுப்ப திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் பாடல் காட்சிகள் இல்லாமல், ஆங்கில சப் டைட்டிலுடன் படத்தை உருவாக்குகிறார்கள். முக்கியமான உலக படவிழாக்களில் திரையிட்டு விட்டு இறுதியாக தியேட்டரில் திரையிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sharing is caring!