ஆரவ்வின் காதலியாகவும் வன விலங்குகள் ஆர்வலராகவும் ஆஷிமா

விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்த ஆரவ், பின்னர் பிக் பாஸ்’ சீசன் 1 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். அந்நிகழ்ச்சியில் ஆரவ் டைட்டில் வின்னரானார். ஆனாலும் அவர் ஆசைப்பட்டபடி ஹீரோவாக நடிக்கும் பட வாய்ப்பு கிடைக்கவிவ்ல்லை.

சமீபத்தில் தான் ‘ராஜபீமா’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார். ‘சுரபி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை நரேஷ் சம்பத் என்ற அறிமுக இயக்குநர் இயக்கி வருகிறார். கும்கி படத்தைப்போலவே யானையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் இது. இந்தப் படத்தில் ஆரவுக்கு ஜோடியாக ஆஷிமா நெர்வால் நடிக்கிறார்.

விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘கொலைகாரன்’ படத்தில் நடித்து வரும் ஆஷிமா நெர்வாலுக்கு அப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள்ளேயே ‘ராஜபீமா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் வாழ்ந்து வரும் ஆஷிமா நெர்வாலின் பூர்வீகம் ஹரியானாவாம். பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு கவனம் பெற்றுள்ள ஆஷிமா நெர்வால் ‘பீமராஜா’வில் ஆரவின் காதலியாகவும். வன விலங்குகள் ஆர்வலராகவும் நடிக்கிறார்.

இந்த படத்தில் யானையும் ஒரு முக்கிய கேரக்டராக வருவதால் அதனுடன் நடிக்க ஆஷிமா இப்போது பயிற்சி எடுத்து வருகிறார்.

Sharing is caring!