‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது

பாகுபலி 2′ படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று(நவ., 19) முதல் ஆரம்பமாகியுள்ளது. ஐதராபாத் அருகில் உள்ள கொக்க பேட் என்ற இடத்தில் படப்பிடிப்பு ஆரம்பமானது. படத்தின் நாயகர்களான ராம்சரண், ஜுனியர் என்டிஆர் மோதும் சண்டைக் காட்சிகள் இன்று படமாக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

ராஜமவுலி முதன் முதலில் இயக்கிய ‘ஸ்டூடன்ட் நம்பர் 1’ படத்தின் நாயகன் ஜுனியர் என்டிஆர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் ‘சிம்ஹாத்ரி, யமதொங்கா’ ஆகிய படங்களில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்தது. ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ‘மகதீரா’ படம் ராம் சரணுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதன்பின் இவர்கள் இருவரும் இப்போதுதான் மீண்டும் இணைகிறார்கள்.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் நாயகிகள் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஹிந்தியிலிருந்து ஜான்வி கபூர், ஆலியா பட் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சில நடிகைகள் நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.

இந்தப் படமும் பல கோடி ரூபாய் செலவில் தயாராகி தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

Sharing is caring!