ஆர். கண்ணன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் அதர்வா

சென்னை:
ஆர். கண்ணன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் அதர்வா. இதற்கான பூஜையும் நடந்துள்ளது.

பூமராங்’ படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கவிருக்கும் ஆக்‌ஷன் படத்திற்கு பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்குகிறது.

அதர்வா நடிப்பில் ‘பூமராங்’ வருகிற மார்ச் 1-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. அதர்வா தற்போது ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்த படத்தை இயக்குவதுடன், தனது ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனம் மூலமாக ஆர்.கண்ணன் தயாரிக்கவும் செய்கிறார். சமுத்திரகனி, சதீஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
ரதன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது.

ஆக்‌‌ஷன் கதையில் உருவாகும் இப்படத்திற்கு தற்காலிகமாக `தயாரிப்பு எண் : 3′ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கான பூஜை நடைபெற்றது.

நன்றி: பத்மா மகன், திருச்சி

Sharing is caring!