ஆர்.கே.நகர் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ்… வெங்கட் பிரபு அறிவிப்பு

சென்னை:
பல மாதங்களால் ரிலீஸ் எப்போது அறிவிக்கப்படாமல் இருந்து வந்த ஆர்.கே.நகர் படத்தின் ரிலீஸ பற்றி அறிவித்துள்ளார் வெங்கட்பிரபு.

அஜித்தின் 50வது படமாக மங்காத்தா என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. மேலும் சென்னை-28 உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்.கே.நகர் படத்தை தயாரித்தும் உள்ளார். நீண்ட மாத கிடப்பில் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

அதன்படி இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாகவும் அதற்குரிய தேதி விரைவில் அறிவிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!