ஆவலுடன் காத்திருக்கிறேன்… வட சென்னை படம் பற்றி அனுராக் சொல்றார்

சென்னை:
இந்த படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று இந்தி டைரக்டர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். எந்த படம் தெரியுங்களா?

வடசென்னை படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வைரலானது. யூடியுப்பில் 3 நாட்களாக இது ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இதை 6.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இந்த டீஸரை பார்த்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் பாராட்டி இருந்தார். தற்போது பாலிவுட்டில் பிரபல இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:

“இந்த படத்திற்காக மிக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இவர் நயன்தாராவின் ஜமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குனர் ஆனந்த் எல் ராயும் இந்த படத்தை பாராட்டி பேசியுள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!