ஆவல்…எதிர்பார்ப்பு…ஓவியா பட வெளியீீடு விரைவில்

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போதுன் இயக்கி நடித்து வரும் படம் காஞ்சனா 3. இதன் முதல் பாகமான முனி படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்த வேதிகா இதிலும் நடிக்கிறார். இவர்களுடன் பிக்பாஸ் புகழ் ஓவியாவும் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். அத்துடன் மும்பை நடிகை, ரஷ்ய நடிகை என மேலும் இரு நடிகைகளும் நடிக்கிறார்கள்.

தவிர, கோவை சரளா, ஶ்ரீமன், தேவதர்ஷினி, மனோபாலா ஆகியோரும் நடிக்கிறார்கள். எஸ்.எஸ் தமன் இசையமைக்கும் இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறார்கள். ஹாரர் படமாக வெளி வந்த இதன் அத்தனை பாகங்களும் சூப்பர் ஹிட். இந்நிலையில் காஞ்சனா 3 படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் தகவல் என்ன தெரியுமா?

வரும் கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 21-ம் தேதி இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம் படக்குழுவினர்.

Sharing is caring!