ஆஸ்கருக்கு போகும் இந்தியப் படம்

அடுத்தாண்டு, நடைபெறும் ஆஸ்கர் விருதுக்கு, இந்தியாவிலிருந்து, வில்லேஜ் ராக்ஸ்டார் என்கிற அசாமி படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு, ரீமா தாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம், அசாம் மாநில கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளின் திறமையையும், கற்பனையையும் கலந்து எடுக்கப்பட்டது.

இதுவரை 70-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ள இந்தப்படம், 4 தேசிய விருதுகள் உட்பட 44 விருதுகளை வென்றுள்ளது.

91வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் இருந்து பல்வேறு மொழி படங்கள் இங்கு விருதுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன. அந்தவகையில் இந்தியாவிலிருந்து இந்தாண்டு வில்லேஜ் ராக்ஸ்டார் படம் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.

Sharing is caring!