ஆஸ்கார் விருதை நானும் வாங்குவேன்… டுவிட் போட்ட விக்னேஷ்சிவன்

சென்னை:
நானும் வாங்குவேன்… ஆஸ்கார் விருது வாங்கி விடுவேன் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 2019ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் குறும்படம் மட்டுமே இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதை வென்றது.

இந்த நிலையில் நானும் ஒருநாள் ஆஸ்கார் விருதை வாங்கிவிடுவேன் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து போட்டோ ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் ஆஸ்கார் விருது என்ற எழுதப்பட்ட கதவருகே விக்னேஷ் சிவன் நின்று கொண்டிருப்பது போல் உள்ளது.

இந்த புகைப்படத்தின் கீழே ‘ஒருநாள் கதவு திறக்கும், அருகில் இருப்பதே நமது வேலை’ என்று கூறியுள்ளார். மேலும் இந்த வருடம் ஆஸ்கார் விருது வென்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!