ஆஸ்கார் விருதை பெற்றது க்ரீன் புக் படம்… சிறந்த படமாக தேர்வு

லாஸ்ஏஞ்சல்ஸ்:
சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதை க்ரீன் புக் படம் பெற்றுள்ளது.

91வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதினை க்ரீன் புக் படம் வென்றுள்ளது. இவ்விழாவில் இந்தியா சார்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார்.

இவர் 2009 ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லினர் படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கார் விருது பெற்றவர்கள் விபரம் வருமாறு:

சிறந்த வெளிநாட்டு படம் – ரோமா, சிறந்த இசை கலவை – பால் மேஸ்சி, டிஎம் கேவஜின், ஜான் கேசலி (படம்-போகிமியான் ரப்சோடி), சிறந்த துணை நடிகை – ரெஜினா கிங் (படம் – இஃப் பீல் ஸ்ட்ரீட் குட் டாக்), சிறந்த ஆவண படம் – பிரீ சோலோ, சிறந்த மேக்அப் – கிரேக் கேனம், கேட் பிஸ்கோ, பேட்ரிசியா டெஹானி (படம்-வைஸ்), சிறந்த ஆடை வடிவமைப்பு – ரூத் கார்ட்டர் (படம்-பிளாக் பேந்தர்).

சிறந்த ஒளிப்பதிவு – அல்போன்சோ குவாரான் (படம் – ரோமா), சிறந்த ஒலி தொகுப்பு – ஜான் வார்ஹஸ்ட், நினா ஹார்ட்ஸ்டோன் (படம் – போகிமியான் ரப்சோடி), சிறந்த திரைப்பட எடிட்டிங் -ஜான் ஓட்மேன் (படம் – போகிமியான் ரப்சோடி), சிறந்த துணை நடிகர் – மஹெர்ஷாலா ஆலி (படம்- க்ரீன் புக்), சிறந்த அனிமேஷன் படம் – ஸ்பைடர் மேன்: இன்டு தி ஸ்பைடர்வெர்ஸ்.

சிறந்த அனிமேஷன் குறும்படம் – BAO, சிறந்த ஆவண குறும்படம் – PERIOD. END OF SENTENCE, சிறந்த விஷூவல் எபக்ட்ஸ் – பவுல் லாம்பர்ட், இயான் ஹன்டர் (படம் : FIRST MAN), சிறந்த LIVE ACTION குறும்படம் – SKIN, சிறந்த திரைக்கதை – க்ரீன் புக், சிறந்த பின்னணி இசை -லுட்விங் கோரன்சன் (படம் -BLACK PANTHER), சிறந்த பாடல் – A STAR IS BORN படத்தின் SHALLOW பாடலுக்காக லேடி காகா, மார்க் ரான்சன், ஆன்டனி ரோசோமன்டோ, ஆன்டிரீவ் வயட்.

சிறந்த நடிகர் – ரமி மாலேக் (படம் – BOHEMIAN RHAPSODY), சிறந்த நடிகை – ஒலிவியா கோல்மேன் (படம் – THE FAVOURITE), சிறந்த படம் – க்ரீன் புக்,

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!