ஆஸ்திரேலியாவிலும் காலை காட்சியாக சர்கார் ரிலீஸ்

சென்னை:
வெளிநாட்டிலும் செம எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது சர்கார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சர்கார் படம் இன்னும் 10 நாட்களில் திரைக்கு வரவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது இந்த படத்தை காண ஆவலாக காத்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் விஜய் படத்திற்கு அதிகாலை காட்சி, காலையில் 8 மணிக்கெல்லாம் காட்சி போட்டு பார்த்திருப்போம். ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவில் வெளியாகவுள்ள சர்கார் படத்திற்கு அங்கு 8 மணிக்கு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் சர்கார் படத்திற்கு வெளிநாட்டில் எவ்வளவு எதிர்பார்ப்பு உள்ளது என்பதை எளிதில் யூகிக்க முடியும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!