இக்கட்டான சூழலில் இருந்து நடிகையை காப்பாற்றிய பிருத்விராஜ்

மலையாள திரையுலகில் குணச்சித்திர நடிப்பல ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை லேனா. தமிழில் அனேகன் படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்தவர் இவர்தான். சமீபத்தில் மணாலி பகுதியில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்டு ஹோட்டலுக்கு திரும்பும்போது, இவர் வந்த வாகனம் பனியில் சிக்கியது. எவ்வளவோ முயற்சிசெய்து பார்த்தும் வாகனம் நகராமல் போகவே, லேனாவும் உடன் வந்தவர்களும் மிகுந்த அச்சம் அடைந்தனராம்.

அதற்கேற்றவாறு அந்தப்பக்கம் வாகனப் போக்குவரத்தும் குறைவாகவே இருந்ததாம். என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து நிலையில் எதிர்பாராதவிதமாக, அதேசமயம் எதேச்சையாக அந்தப்பக்கம் நடிகர் பிருத்விராஜ் தனது குழுவினருடன் ஜீப்பில் வந்து கொண்டிருந்தாராம். லேனா மற்றும் குழுவினர் தவிப்பதை பார்த்து, அவர்களது வண்டியை கட்டி இழுத்துச்சென்று இக்கட்டான சூழலில் இருந்து அவர்களை காப்பாற்றினாராம்

பிருத்விராஜ் நடித்துவரும் ‘9’ படத்தின் படப்பிடிப்பும், அதே பகுதியில் தான் நடந்து வருவதால் அந்தப் பக்கமாக அவர் வர நேர்ந்ததாம் பிருத்விராஜ் மட்டும் வராவிட்டால் தங்களது நிலை என்ன ஆகியிருக்குமோ என நினைத்து இப்போது நினைத்தாலும் திக்கென்று இருக்கிறதாம் லேனாவுக்கு..

Sharing is caring!