இசையமைப்பாளரின் படத்திற்கு இசையமைத்த இளையராஜா

பாபு யோகேஷ்வரன்  இயக்கும், தமிழரசன்  திரைப்படத்தில், இசையமைப்பாளரும், நடிகருமான‌ விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசனும், வில்லனாக‌ சோனு சூத் நடிக்கின்றனர். மேலும், சுரேஷ்கோபி, ராதாரவி,  யோகிபாபு, சங்கீதா, கஸ்தூரி, மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.  அவர்களோடு  இயக்குநர் மோகன் ராஜாவின், மகன் பிரனவ் ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சென்னையை தொடர்ந்து பாண்டிச்சேரியில் படப்பிடிப்பை நடத்திவருகின்றனர் படக்குழு.

இந்நிலையில்,தமிழரசன் படத்திற்கான‌“பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா ” என்ற புரட்சிகரமான பாடலை இளையராஜா இசையில், யேசுதாஸ் பாடியுள்ளார்.  இவர்களின்  சூப்பர் கூட்டணி, ஒன்பது வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளதால்.  இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Sharing is caring!