இசையமைப்பாளர் யுவனுக்கு பேனர் வைத்து அசத்திய ரசிகர்கள்

சென்னை:
இசையமைப்பாளர் யுவனுக்கு பேனர் வைத்து அசத்தி உள்ளனர் அவரது ரசிகர்கள்.

நடிகர்களுக்கு அவர்களது படம் வெளியாகும் தினத்திலும் அவர்களது பிறந்தநாளின் போதும் ரசிகர்கள் பேனர் வைப்பது சாதாரணம் தான். ஆனால் நடிகர்கள் அளவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்துள்ள யுவன் ஷங்கர் ராஜாவுக்கு நடந்துள்ளது.

மலையாள நடிகர் மம்முட்டியின் நடிப்பில் பேரன்பு படம் ரிலீஸானது. ஆனால் மம்முட்டியின் பேனரை விட படத்திற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அவரது ரசிகர்கள் பிரமாண்ட பேனர் வைத்துள்ளனர்.

இந்த பேனரை தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள ஆடையூர் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர் மன்றத்தினர் தான் வைத்துள்ளனர்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!