இசை மழை….ரஹ்மான் இசை….இளையராஜா பாடல்

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்து வரும் இளையராஜா 75 நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்ட் வாசிக்க இசைஞானி இளையராஜா மன்றம் வந்த தென்றலுக்கு பாடலை பாடிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.

தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், இளையராஜா 75 நிகழ்ச்சி இன்று மாலை தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் வந்திருந்தார்.

இளையராஜாவுடன் மேடை ஏறிய ரஹ்மான் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, பேசிய இளையராஜா, ”ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடன் 500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்” எனக் குறிப்பிட்டார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான், ”உங்களுடன் ஒரு படத்தில் பணியாற்றுவதே பெரிய விஷயம்”என்று கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டு வாசிக்க, இளையராஜா ஒரு பாடல் பாட வேண்டும்’’ என்று நடிகை கஸ்தூரி கோரிக்கை வைக்க, சிரித்துக்கொண்டே அதை இளையராஜாவும் ரஹ்மானும் ஏற்றுக்கொண்டார்.

`மன்றம்வந்த தென்றலுக்கு மஞ்சம் வர!’ என இளையராஜாபாட, அரங்கமே அதிர்ந்தது. உடனே ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டை வாசிக்கத் தொடங்கினார். தமிழர்களில் இரு பெரும் பெருமைகள் ஒரே மேடைகள் கண்ட இந்த அற்புத தருணத்தை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Sharing is caring!