இடையில் என்ன நடந்தது?

தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்யும், அட்லியும் மூன்றாவது முறையாக இணையும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதிலிருந்து இப்படத்தின் கதை எந்த மாதிரியானதாக இருக்கும்? இதில் விஜய்யின் கேரக்டர் என்னவாக இருக்கும்” என்பன போன்ற கேள்விகள் விஜய் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட ‘தளபதி-63’ படஅறிவிப்பு போஸ்டர் ஸ்போர்ட்ஸ் ஜெர்சி ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருந்தது. எனவே இப்படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என்றும், இதில் விஜய் புட்பால் ‘கோச்’சாக நடிக்கிறார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே ‘கில்லி’ படத்தில் கபடி விளையாட்டு வீரராக நடித்துள்ளார் விஜய். அதன்பிறகு எந்தப்படத்திலும் முழுமையான ஒரு ஸ்போர்ட்ஸ்மேனாக நடித்ததில்லை. எனவே ‘தளபதி-63’ புட்பால் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாக இருக்க வாய்ப்புள்ளது!

இதற்கிடையில் ரஜினி நடித்த அண்ணாமலை படத்தின் சாயலில் தான் அட்லி கதை பண்ணி வருகிறார் என்ற தகவல் அடிபட்டது. தற்போது விளையாட்டு வீரரின் கதை என்கிறார்கள்.

இடையில் என்ன நடந்தது? படம் எடுக்கும்போதோ எடுத்த பிறகோ கதை தொடர்பாக எந்தப்பிரச்சனையும் வரக்கூடாது என்று கறாராக கூறியதோடு, அட்லியை எச்சரித்துள்ளார் விஜய். அதன் பிறகே அண்ணாமலை கதையை ஓரமாக வைத்துவிட்டு, புட்பால் கதையை கையில் எடுத்திருக்கிறார்.

இது எந்தப்படத்திலிருந்து சுட்டதுன்னு தெரியலையே?

Sharing is caring!