இடைவேளையில் எடுக்கப்பட்ட படத்தை வைத்து வதந்தி

சென்னை:
இடைவேளையில் எடுக்கப்பட்ட படத்தை இப்படி வெளியிட்டு வதந்தி பரப்பினர் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

இந்திய சினிமாவுக்கே சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரின் 2.0 படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை ரஜினி தன்னுடைய குடும்பத்தோடு திரையரங்கில் பார்த்துள்ளார்.

அந்த புகைப்படம் வெளியானது. அதில் இருக்கைக்கு பின்பு அவர் வீட்டில் வேலை செய்யும் பெண் நின்று கொண்டிருந்தார். இதனால் வேலைக்காரப் பெண்ணை நிற்க வைத்தே படம் பார்க்கவைத்தார் சூப்பர்ஸ்டார் என்று ஒரு வதந்தி பரவியது. ஆனால் உண்மையில் அந்த பெண்ணும் அமர்ந்து தான் பார்த்தாராம்.

அந்த புகைப்படம் இடைவேளையில் எடுக்கப்பட்டதாம். அப்போது அவரும் அருகில் நின்றதால் இப்படி ஒரு வதந்தி பரவியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!