இணையத்தில் உலா வரும் சர்கார் டீஸர் வசனம்? ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை:
லீக் ஆகிடுச்சா… லீக் ஆகிடுச்சா… என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எதற்காக தெரியுங்களா?

சர்கார் டீஸருக்காகத்தான் விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் வெயிட்டிங். மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் புதிய சாதனைகள் அது படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் தற்போது டீசரின் சில நொடிகள் லீக் ஆகி இணையத்தில் உலா வருகிறது. மேலும் இது யூத் படத்தில் வரும் பழைய வசனம் தான் என்பதால் இது போலியானதோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

“இந்த உலகத்துல காத்து, தண்ணி, வானம் – இந்த மூணும் எல்லாருக்கும் பொது. அதை என் தண்ணி, என் காத்து .. தரமாட்டேன்.. விடமாட்டேன் என பக்கத்து ஸ்டேட் காரன் மாதிரி பேசுறது ரொம்ப தப்பு ” என விஜய் பேசும் வசனம் அதில் உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!