இணையத் தொடரில் கால் பதிக்கிறார் நடிகை நித்யா மேனன்

மும்பை:
இணைய தொடரில் கால்பதிக்க இருக்கிறார் நடிகை நித்யா மேனன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நித்யா மேனன் தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
இணையங்களில் வெளியாகும் தொடர்களுக்கு இந்தியா முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தி பிரபலங்களை தொடர்ந்து தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களும் இந்த தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

சென்சார் இல்லை என்பதாலும் குறைந்த பட்ஜெட்டில் தொடரை உருவாக்கி அதிக செலவு இல்லாமல் வெளியிட முடியும் என்பதாலும் இணைய தொடரில் ஆர்வம் காட்டுகிறார்கள். மாதவன் இந்தியில் நடித்த இணைய தொடரான ‘பிரீத்’ தொடர் இணையதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் இரண்டாவது சீசன் தற்போது தயாராக உள்ளது. முதல் சீசனை இயக்கிய மயங் அகர்வால் இந்த சீசனையும் இயக்குகிறார். மாதவனுக்குப் பதிலாக அபிஷேக் பச்சன், அமித்சத் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நித்யா மேனன் இணைந்துள்ளார். இதுவரை திரைப்படங்களில் நடித்து வந்த இவர், இதன் மூலம் இணைய தொடரில் கால்பதிக்க இருக்கிறார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!