இணையுமா… 12 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் – ரஹ்மான் கூட்டணி?

சென்னை:
12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கூட்டணி இணையுமா என்று ரசிகர்கள் வெகு ஆவலாக உள்ளனர். என்ன விஷயம் தெரியுங்களா?

அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வரும் ஜனவரி 2019 ல் ரிலீஸாகவுள்ளது. அவரின் அடுத்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இளம் இயக்குனர் வினோத் இயக்குகிறார்.மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இப்படத்தை தயாரிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்திற்கு யுவன் அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேளை ரஹ்மான் இணைந்தால் அஜித்தின் 2006 ல் வந்த வரலாறு படத்திற்கு பின் 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைவதாக இருக்கும்.

கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் படத்திற்கும் ரஹ்மான் தான் இசையமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!