இது சரியாங்க… சரியா… பொங்கி எழுந்துள்ள ரசிகர்கள்

சென்னை:
இது என்ன நியாயம் இயக்குனரே என்று பொங்கி எழுந்துள்ளனர் ரசிகர்கள். எதற்காக தெரியுங்களா?

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த வியாழக்கிழமை வெளியான படம் தமிழ் படம் 2. இந்த படத்திற்கு செம வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் சிலர் இயக்குனர் அமுதனுக்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். காரணம் தமிழ் படங்களை கலாய்த்துதான் இவர் படம் எடுத்து வருகிறார். இவர் எடுத்த இரண்டாவது படம் (தலைப்பே இதுதாங்க) என்னாச்சு என்றே தெரியலை என்று வறுத்தெடுக்கின்றனர்.

எது எப்படி இருந்தாலும் படம் செம வசூலை எடுத்து வருது.
படத்தில் மொத்த தமிழ் சினிமாவின் முக்கிய படங்களையும் பிரதிபலித்திருந்தார்கள். முன்னணி நடிகர்கள், நடிகைகளை கூட கலாய்த்திருந்தார்கள். இப்படத்தில் அரசியல் கூத்துக்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

இதில் எதிர்கட்சி தலைவரை கலாய்ப்பது போல ஒரு காட்சி இருந்தது. இதற்கு சம்பந்தப்பட்ட அரசியல் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கு இப்போது கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!