இத்தாலி நாட்டில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே இருவருவது திருமணம்

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே இருவருவது திருமணம் வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் இத்தாலி நாட்டில் உள்ள லேக் கோமோ என்ற இடத்தில் நடைபெற உள்ளது. அதற்காக ரன்வீர் சிங் குடும்பத்தினர், தீபிகா படுகோனே இன்று மும்பையிலிருந்து இத்தாலி புறப்பட்டுச் சென்றனர்.

இருவருமே வெள்ளை நிற ஆடை அணிந்து வந்தது விமான நிலையித்தில் இருந்த போட்டோகிராபர்களையும், பயணிகளையும் கவர்ந்தது. 2013ம் ஆண்டிலிருந்தே காதலித்து வருகிறது ரன்வீர், தீபிகா ஜோடி. தீபிகா படுகோனே ஹிந்தித் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக இருக்கிறார்.

இத்தாலியில் திருமணம் முடிந்த பின் தீபிகா படுகோனே அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக அவரது சொந்த ஊரான பெங்களூருவில் நவம்பர் 21ம் தேதி ஒரு வரவேற்பை நடத்த உள்ளார். அதன்பின் ரன்வீர், தீபிகா இருவரும் திரையுலகப் பிரமுகர்களுக்காக டிசம்பர் 1ம் தேதி நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன், அனுஷ்கா சர்மா ஆகியோரது வரிசையில் தீபிகாவும் இணைகிறார்.

Sharing is caring!