இந்தப் படம் பெரிதல்ல, விட்டுவிடுங்கள்!

முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் ‘800’ படத்தில் நடிப்பதைத் தவிர்க்குமாறு விஜய் சேதுபதிக்கு சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது.

ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.

விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குனர் சேரன் இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது

என பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!