இந்தியன் பட நடிகை அரசியலில் குதித்தார்

ரங்கீலா, சமத்கார் உள்ளிட்ட ஹிந்தி படங்களிலும், கமல்ஹாசன் நடித்த, இந்தியன் என்ற தமிழ் படத்திலும் நடித்தவர், ஊர்மிளா. கடந்த சில நாட்களாகவே, காங்கிரஸ் கட்சியில் சேர, அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று, டில்லியில், காங்., தலைவர் ராகுலை, அவரது வீட்டில் சந்தித்த ஊர்மிளா, அவர் முன்னிலையில், காங்., கட்சியில், இணைந்தார். இதையடுத்து, ‘வரும் லோக்சபா தேர்தலில், காங்., வேட்பாளர்களை ஆதரித்து, ஊர்மிளா பிரசாரம் செய்வார்’ என, காங்., சார்பில் அறிவிக்கப்பட்டது.

நிருபர்களிடம் ஊர்மிளா கூறியதாவது: தேர்தலில் போட்டியிடுவதற்காக, காங்., கட்சியில் சேரவில்லை. காங்கிரசின் கொள்கைகள் பிடித்ததால், சேர்ந்தேன். இன்றைய தினம், என் வாழ்நாளில் முக்கியமானது. முறைப்படி, அரசியலில் நுழைந்துள்ளேன். தொடர்ந்து காங்கிரசில் பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Sharing is caring!