இந்தியன் 2வுடன் முடிவு… கலைப்பயணத்திற்கு முடிவு… முழு நேர அரசியல்தான்… அரசியல்தான்… கமல் தகவல்

சென்னை:
அவ்வளவுதான்… இந்தியன் 2 வுடன் சினிமாவுக்கு முழுக்கு… முழு நேர அரசியல் என்று அறிவித்தே விட்டார் கமல்.

2019ம் ஆண்டு லோக்சபா தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக கமல்ஹாசன் தொிவித்தார்.

6 வயதில் களத்தூா் கண்ணம்மா படம் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்து தன் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறாா்.

சினிமா வரலாற்றில் பல சாதனைகள் செய்த கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கியிருக்கிறார்.
கடந்த 1996ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் 2ம்  பாகம் 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாக உள்ளது. அந்த படத்திற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கமல்ஹாசன் கொச்சியில் தெரிவித்துள்ளதாவது:

2019ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும். தோ்தல் வரவுள்ள நிலையில் எனது நடிப்பில் வெளியாகும் கடைசி படமாக இந்தியன் 2 இருக்கும். இதற்கு பின்னா் நான் படங்களில் நடிக்க மாட்டேன்.

ஆனால் எனது பட தயாரிப்பு நிறுவனம் தொடா்ந்து செயல்படும். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளிலும் அது தொடா்ந்து ஈடுபடும். மக்கள் நலன் என்று வரும்போது மதசாா்பற்ற அணிகளுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் தொிவித்துள்ளாா்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!