‘இந்தியன் 2’ நடிக்க உள்ளார்

இரண்டாம் பாகங்களின் ஆண்டாக 2018ம் ஆண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. சில இரண்டாம் பாகப் படங்கள் வெளிவந்துவிட்டன, பல இரண்டாம் பாகப் படங்கள் உருவாகி வருகின்றன.

கமல்ஹாசன் நடித்து வெளிவந்த ‘விஸ்வரூபம் 2’ படம் வெற்றி பெறாமல் தோல்வியடைந்துவிட்டது. இந்தப் படத்திற்குப் பிறகு, ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க உள்ளார். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

இதையடுத்து கமல், ‘தேவர் மகன் 2’ படத்தில் நடிக்கலாம் என்ற தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது. இதற்கான கதையை கமல் எழுத ஆரம்பித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

1992ம் ஆண்டில் மலையாள இயக்குனர் பரதன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன், சிவாஜிகணேசன், ரேவதி, கவுதமி, நாசர், வடிவேலு மற்றும் பலர் நடித்த இந்தப்படம் தமிழ் சினிமாவின் ‘கிளாசிக்’ படங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

Sharing is caring!