இந்தியன் 2 படத்தில் இணைந்தார் நடிகர் ஆர்ஜே பாலாஜி

சென்னை:
இந்தியன் 2 படத்தில் நடிகர் RJ பாலாஜியும் இணைந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் ஷங்கர் அடுத்து லைகா நிறுவனத்தில் தயாரிப்பில் இந்தியன் 2 படத்தை எடுக்கவுள்ளார். இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தியன் படம் ஹிட் என்பதால் இந்தியன் 2க்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் துவங்கியுள்ளது.

தற்போது நடிகர் RJ பாலாஜியும் படக்குழுவில் இணைந்துள்ளார். சென்னையில் நடக்கும் ஷூட்டிங்கில் பல முக்கிய காட்சிகளை எடுக்கவுள்ளார். அதன் பின் படக்குழு வெளிநாட்டிற்கு பறக்கவுள்ளது. அங்கு பல மாதங்கள் ஷூட்டிங் இருக்கும் என்று கூறப்படுகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!