இந்தியன் 2 படத்தில் சிம்பு பொலிஸ் அதிகாரி வில்லன்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் சிம்பு பொலிஸ் அதிகாரியாக வில்லன் வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் இந்தியன். நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படத்தில் கமல் சுதந்திர போராட்ட வீரராகவும், இலஞ்சம் வாங்கும் மகனாகவும் நடித்திருந்தார்.

நேர்மையே கொள்கையாக வைத்திருக்கும் தந்தை தனது கொள்கைக்கு எதிராக இருக்கும் மகனையே கொல்வது போல படத்தின் முடிவு அமைந்திருந்தது.

1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் அடுத்த பாகமாக இந்தியன் 2 உருவாக இருக்கிறது. கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு வெளியானது. கமல் நடிக்க ‌ஷங்கர் இயக்குகிறார்.

‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.0 படம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. அந்த படம் வெளியான சில நாட்களில் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக செட் அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது.

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போதைய தகவல்படி கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்றும் மேலும் துல்கர் சல்மான், சிம்பு ஆகியோரும் நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

சிம்பு இந்த படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும், கமலுக்கு வில்லனாக வருவார் என்றும் கூறப்படுகிறது. ‌ஷங்கர் படங்களில் கதாநாயகர்களுக்கு சமமாக வில்லன்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும். இந்தியன் முதல் பாகத்தில் தந்தை கமலுக்கு மகன் கமலே வில்லனாக அமைந்திருப்பார்.

முதல் பாகத்தின் கதையே இலஞ்சத்திற்கு எதிரானதாக இருந்தது. இரண்டாம் பாகம் ஊழலுக்கு எதிரான படமாக இருக்கும் என்கிறார்கள். 21 ஆண்டுகள் கழித்து திரும்பும் சேனாபதி, நாடு முழுவதும் பரவியுள்ள ஊழலை ஒழிப்பதே கதை என்கிறார்கள்.

Sharing is caring!