இந்தியன் 2 பணிகளில் இயக்குனர் ஷங்கர் தீவிரம்

சென்னை:
பிக்பாஸ் முடிந்து கமல் வந்தவுடன் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் தொடங்கவுள்ள படம் இந்தியன்-2. இப்படத்தின் மீது பிரமாண்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பே இப்படத்திற்கான லொக்கேஷன் தேடும் பணிகளை ஷங்கர் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுடன் இணைந்து பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

தற்போது கமலுக்காக தான் வெயிட்டிங். அதற்கு முன்பே பல வேலைகளை ஷங்கர் முடிக்க செம பிளான் போட்டு வருகிறார். பிக்பாஸ்-2 முடித்த அடுத்த வாரமே கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஷங்கர் வேகவேகமாக எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!