இந்தியன் 2 மேக்கப் டெஸ்ட்… செம கலக்கல்… இயக்குனர் தகவல்

சென்னை:
“இந்தியன் கலக்கிட்டிருக்கார்” என்று இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?

இயக்குனர் ஷங்கர் ரஜினியுடன் 2.0 படத்தை தொடர்ந்து எடுக்கவுள்ள படம் இந்தியன் 2. கமல்ஹாசனுடன் அவர் மீண்டும் கூட்டணி வைக்கிறார். இப்படத்திற்காக அறிவிப்புகள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ன் போதே கூறிவிட்டார்.

படத்திற்காக முதற் கட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. அண்மையில் இயக்குனர் ஷங்கர் நேர்காணலில் ஒன்றில் கலந்துகொண்டார்.

அதில் அவர் கூறுகையில், இந்தியன் 2 மேக்கப் டெஸ்ட் எடுத்தோம் “இந்தியன் கலக்கிட்டிருக்கார்” திரும்ப தாத்தா மேக்கப் போட்டு பாக்கும் போது சிலிர்த்திருச்சு, எனர்ஜி குறையாம மேக்கப் டெஸ்ட் பண்ணாரு, சில ஸ்டில்ஸ் எடுத்தோம். அப்படியே பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!