இந்தியன் 2 ல் மலையாள நடிகர் துல்கர் சல்மான், சிம்பு

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இந்தியன் 2 படத்திற்கான அரங்கு அமைக்கும் வேலைகள் கடந்த வாரம் ஆரம்பமானது. அப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அது போலவே மலையாள நடிகர் துல்கர் சல்மான், சிம்பு ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.

படத்தை ஹிந்தியிலும் டப்பிங் செய்து வெளியிட வசதியாக அஜய் தேவகனை படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால், அவர் நடிக்க மறுத்துவிட்டதாகத் தகவல். எனவே, இயக்குனர் ஷங்கர், 2.0 படத்தின் வில்லன் அக்ஷய் குமாரை, நடிக்கும்படி கேட்டிருக்கிறாராம்.

2.0 படத்தில் ரஜினிகாந்துக்குப் போட்டியாக நடித்துள்ள அக்ஷய் குமார், இந்தியன் 2வில் கமல்ஹாசனுக்குப் போட்டியாக நடித்தால் நல்லது என நினைக்கிறாராம். ஷங்கரின் ஆசையை அக்ஷய்குமார் நிறைவேற்றுவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.

Sharing is caring!