இந்தியன் 2 வில் தெலுங்கு காமெடி நடிகர் வெண்ணிலா கிஷோர்

சென்னை:
பிரபல தெலுங்கு காமெடி நடிகர் வெண்ணிலா கிஷோர் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஷங்கர்; தன் அடுத்த பட பணிகளை துவங்கிவிட்டார். இந்தியன் 2ம் பாகத்தை தான் ஷங்கர் இயக்கவுள்ளார். இதில் கமல் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் நடிகர் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபல தெலுங்கு காமெடி நடிகர் வெண்ணிலா கிஷோர் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக தெலுங்கு மீடியாக்களில் தகவல் வெளியாகியுள்ளது.

70 நாட்கள் கால்ஷீட் கொடுக்குமாறு ஷங்கர் கேட்டுள்ளாராம். அதனால் இவர் படம் முழுவதும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!