இந்தியாவின் சத்யஜித் ரேயின் படத்திற்கு 15வது இடம்

லண்டன்:
சிறந்த வெளிநாட்டு மொழி படங்களில் சத்யஜித் ரேயின் படம் 15வது இடத்தை பிடித்துள்ளது.

‘பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்’ எனப்படும், பி.பி.சி., 100 சிறந்த வெளிநாட்டு மொழி படங்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், நம் நாட்டை சேர்ந்த, சத்யஜித் ரேயின், காவிய படைப்பான, ‘பதேர் பாஞ்சாலி’ திரைப்படம், 15வது இடத்தை பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்ற, ஒரே இந்திய மொழி படம் என்ற பெருமையை, பதேர் பாஞ்சாலி பெற்றுள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். இது இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் கிடைத்த மாபெரும் பெருமை.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!