இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இந்தி படம்… ராணுவ வீரர்களுடன் பார்த்து ரசித்த மத்திய அமைச்சர்

பெங்களூரு:
இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த இந்தி படத்தை வீரர்களுடன் அமர்ந்து ராணுவ அமைச்சர் பார்த்து ரசித்தார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது, இந்திய ராணுவத்தினர், 2016ல், நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தாக்குதல் குறித்து எடுக்கப்பட்ட ஹிந்தி திரைப்படத்தை, வீரர்களுடன் அமர்ந்து ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்து ரசித்தார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள யுரி என்ற இடத்தில் இந்திய ராணுவ முகாம் மீது, பாக்., பயங்கரவாதிகள் 2016ல் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில், 17 ராணுவ வீரர்கள் பலியாகினர். இதையடுத்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ எனப்படும் துல்லியமான தாக்குதலை நடத்தினர்.

இதில், 20க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து யுரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற இந்தி திரைப்படம் எடுக்கப்பட்டது. இதில், ‘பாலிவுட்’ நடிகர்கள், விக்கி கவுஷல், யாமி கவுதம் ஆகியோர் நடித்தனர். ஆதித்யா தர், இயக்கினார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள திரையரங்கில், இந்த படத்தை ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று பார்த்து ரசித்தார். அவருடன், ராணுவ வீரர்களும் இந்த திரைப்படத்தை பார்த்து ரசித்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!