இந்தியா முழுவதும் சர்கார் படம் முதல் நாள் வசூலித்த தொகை 46.75 கோடி

தீபாவளி அன்று திரைக்கு வந்துள்ள விஜய் நடித்த சர்கார் படம் தமிழகம் முழுக்க சுமார் 750க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து சமூகவலைத்தளங்களில் பல்வேறு விவரங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

உண்மையில் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல்தான் என்ன?

தமிழ்நாடு அளவில் 33 கோடி வசூல் செய்திருப்பதாக டிரேடிங் வட்டார தகவல் தெரிவிக்கின்றன. கேரளாவில் 5.75 கோடியும், கர்நாடகாவில் 4.5 கோடியும், வட இந்தியாவில் 1.5 கோடியும், ஆந்திரா மற்றும், தெலுங்கானாவில் 2 கோடியும் சர்கார் படம் வசூலித்திருக்கிறது. இதன் அடிப்படையில், இந்தியா முழுவதும் சர்கார் படம் முதல் நாள் வசூலித்த தொகை 46.75 கோடி.

வெளிநாடுகளில் சுமார் 15 கோடியை வசூலித்திருப்பதாகவும், அதில் அமெரிக்காவில் மட்டும் 5.5 கோடி வசூலித்திருப்பதாக தகவல்.

ஆக.. சர்கார் படம் முதல்நாளில் உலகம் முழுக்க வசூல் செய்த தொகை 62 கோடி.

Sharing is caring!