இந்தியா வந்தது உதவி இயக்குனராக பணியாற்றவே…பிரியா ஆனந்த்

பிரியா ஆனந்த் நடிப்பில் வௌியான எல்கேஜி படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றவே தான் இந்தியா வந்ததாக பிரியா ஆனந்த் கூறியுள்ளார்.

வாமணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா ஆனந்த் தொடர்ந்து எதிர்நீச்சல், அரிமா நம்பி போன்ற படங்களில் நடித்தார்.

சில வருடங்களாக படங்கள் இல்லாமல் இருந்த பிரியா ஆனந்தின் நடிப்பில் அண்மையில் எல்கேஜி படம் வெளியானதுடன், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.

அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், பிரியா ஆனந்த் பேட்டியொன்றில்,

ஷங்கர் சாரிடம் அசிஸ்டெண்டாக வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. அவருக்கு டீ, காபி கொடுக்கிற வேலை கிடைத்தால் கூட போதும் என்று தவிப்புடன் இருந்தேன். ஆனால், இப்போது ஐந்து மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிற நடிகையாகிவிட்டேன்

என கூறியுள்ளார்.

Sharing is caring!