இந்திய படங்களுக்கு தடை விதிக்க பாக்., திரைப்பட தயாரிப்பாளர்கள் கோரிக்கை

கராச்சி:
தடை விதிக்க வேண்டும்… இந்திய படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாக்., திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

‘பாகிஸ்தானில், இந்தியப் படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என, அந்நாட்டு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாலிவுட்டில் தயாரிக்கப்படும் இந்தி படங்களை, பாக்.,கில் வெளியிடுவதால், தங்கள் நாட்டு திரைப்பட வர்த்தகம் பாதிக்கப்படுவதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ‘பாக்.,கில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் இந்தியாவில் வெளியிடப்படாத போது, அந்நாட்டு படங்களை மட்டும் பாக்.,கில் ஏன் வெளியிட வேண்டும்’ என தயாரிப்பாளர்கள் சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!