இந்த தீபாவளி ஸ்பெஷல் அருணாச்சலம் காப்புதான்

சென்னை:
அருணாச்சலம் படத்தில் ரஜினி அணிந்திருக்கும் காப்புதான் இப்போது தீபாவளி டிரெண்டாகி உள்ளதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து முடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டிரைலர் நாளை 3ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. இதனை அவரே அறிவித்து விட்டார்.

இதைவிட சூப்பரான ஒரு விசயம் இருக்கு. என்ன தெரியுங்களா? அருணாச்சலம் படம் ரஜினியை இன்னும் யாராலும் மறக்க முடியாது. இப்படத்தில் அவரின் கெட்டப்பே தனி ஸ்டைல் தான். அதிலும் கையில் ஒரு தங்க காப்பு அணிந்திருப்பார் பாருங்கள்.

அநேக ஆண்களின் மனதையும் ஈர்த்தது அன்று. தற்போது நகைக்கடைகளில் ஆண்கள் பலரும் அதை தான் விரும்பி வாங்குகிறார்களாம். இந்த வருட தீபாவளி ஸ்பெஷலே அதுதான் என்கிறார்கள் நகைக்கடை நிறுவனத்தார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!