‘இந்த பொண்ணு… பெரிய நடிகையா வருவா’ – சிமரன்

பிரசாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்த, ஜோடி படத்தில், தோழி வேடத்தில் நடித்தவர், த்ரிஷா. அதன்பின், மவுனம் பேசியதே படத்தில் இருந்து இப்போது வரை, கதாநாயகியாகவே நடித்து வருகிறார். தற்போது, ரஜினிக்கு ஜோடியாக, பேட்ட படத்தில் த்ரிஷா நடிக்க, ஒரு சிறிய கேரக்டரில் சிம்ரன் நடிக்கிறார்.

இதுபற்றி சிம்ரன் கூறுகையில், ‘த்ரிஷா என்னுடன் நடித்தபோதே, ‘இந்த பொண்ணு… பெரிய நடிகையா வருவா’ன்னு சொன்னேன். அது நடந்துடுச்சு… அதோடு, எனக்கு அடுத்தபடியா, நடனத்துல ஒரு சிறந்த நடிகைன்னா அது, த்ரிஷா தான்…’ என்று பெருமையாக சொல்கிறார். ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்!

Sharing is caring!