”இனிமேல் இதுபோன்று செய்யக்கூடாது” கண்டித்த அஜித்

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தனது காரில் சென்றார் அஜித்குமார். அப்போது அவரைப் பார்த்துவிட்ட ரசிகர் ஒருவர், தனது டூவீலரில் அவரை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். அதைப்பார்த்த அஜித், என்னை தொடர வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

ஆனபோதும் அந்த ரசிகர் கேட்கவில்லையாம். 8 கிலோ மீட்டார் அஜித்தை தொடர்ந்து சென்றிருக்கிறார். அதையடுத்து அந்த ரசிகரை அழைத்து, இனிமேல் இதுபோன்று செய்யக்கூடாது என்று கண்டித்த அஜித், அந்த ரசிகரின் ஆசைப்படியே தான் காருக்குள் அமர்ந்தபடியே அவருடன் ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்.

Sharing is caring!