இனிமே சமையல்தான்…..தாளிச்சிடலாம்….கமல்

வாரம் முழுக்க பிக்பாஸ் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கலை கட்டும். கமல் ஹாசனுக்காக என்று அதை சொன்னாலும், மற்ற நாட்களில் உள்ளே நடக்கும் தவறுகளை அவர் தட்டிக் கேட்க மாட்டாரா என்ற எதிர்ப்பார்ப்பு தான் அதற்கு முக்கியக் காரணம்.

வீட்டில் நடப்பவைகளைப் பார்த்து ரசிகர்கள் பிபி எகிறிக் கிடக்கும் நிலையில், இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

இளைஞர் போல கட்டம் போட்ட சட்டை போட்டிருக்கும் கமல் மேடையில் தோன்றுகிறார். பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் இறங்கி, ‘என்ன நடக்குது இங்க? கேக்குறேன். நா அவங்கள கண்டிச்சேன், கேட்டாங்களா? பொதுவா சொல்லிப் பாத்தேன், கோவப் பட்டேன். இதுக்கு மேல என்ன, என்ன செய்ய சொல்றீய?’ என்கிறார். அதற்கு ‘கண்டிங்க’ என ஆடியன்ஸ் கோரஸாக சொல்ல, ‘கண்டிச்சா கேக்க வேண்டியது தானே’ என்கிறார்.

‘நீங்க கேக்கணும் சார்’ என ஆவேசமாக சொல்கிறார் ஒரு பெண். ‘நா கேக்குறேன் யார கேக்குறது’ என்கிறார் கமல். ‘மஹத் மஹத் மஹத்’ என கோர்ட்டில் சொல்வது போல் விடாமல் சொல்கிறார் அந்தப் பெண். ‘சரி மஹத், ஐஸ்வர்யா, அப்புறம்’ என கமல் கேட்க, ‘யாஷிகா’ என்கிறார்கள் ஆடியன்ஸ்.

‘சரி மெனு குடுத்துட்டீங்கள்ல, இனிமேல் சமையல் தான். தாளிச்சிடலாம் வாங்க’ என்கிறார் கமல்.

இந்த ப்ரோமோவில் ‘ஒபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா ஃபினீசிங் சரியில்லயேப்பா உன்கிட்ட’ போன்ற கமெண்டுகளை தெறிக்க விடுகிறார்கள் ரசிகர்கள்.

Sharing is caring!