‘இனி சினிமாவில் நடிப்பது சந்தேகம்தான்’

‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலம் ஆனவர் ப்ரியா பவானி சங்கர். தொலைக்காட்சி தொடருக்குப் பின், நான் நடிக்கப் போவதில்லை என்று சொல்லி வந்தவர், திடுமென, சினிமாவில் நடிக்கத் துவங்கி விட்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் அவர், அவ்வப்போது, ‘இனி சினிமாவில் நடிப்பது சந்தேகம்தான்’ என்று சொல்வதை வாடிக்கையாக்கி இருக்கிறார்.

இடையிடையே, போட்டோ ஷூட் நடத்தி, விதம் விதமாக படங்கள் எடுத்து அதை, சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் அவரது வாடிக்கை. இந்நிலையில், அவர் நாவல் எழுதும் வேலையில் தீவிரமாகி இருக்கிறார். எழுதி முடித்ததும், அந்த நாவலை எப்படி வெளியிடுவது என தீர்மானிக்கப் போவதாகக் கூறியிருக்கிறார். நாவல் எழுதுவதில் தீவிர கவனம் செலுத்தினாலும், சினிமாவில் நடிப்பதை விடப் போவதில்லை என்று, பழைய அறிவிப்புகளுக்கு மாறாக பேசத் துவங்கி இருக்கிறார் ப்ரியா பவானி சங்கர்.

Sharing is caring!