இன்டர்வெல் பிளாக் மரண மாஸ்… பேட்ட படம் பற்றி கஸ்தூரி டுவிட்

சென்னை:
இன்டர்வெல் பிளாக் மரண மாஸ்… என்று நடிகை கஸ்தூரி போட்ட டுவிட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் வெளியாகி ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், பேட்ட படத்தின் இண்டர்வல் ப்ளாக் மரண மாஸ். தலைவர் ரஜினிகாந்த் சூப்பராக ஸ்டைலாக இருக்கிறார். படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் அற்புதம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகப்பெரிய விருந்தையளித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். இதை பார்த்து குதூகலம் ஆன ரஜினி ரசிகர்கள், கஸ்தூரிக்கு நன்றி சொல்லி வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!