இன்னைக்கு இல்ல… நாளைக்குதான் பியார் பிரேமா காதல் ரிலீஸ்

சென்னை:
இல்லங்க… இன்னைக்கு இல்ல பியார் பிரேமா காதல் படம் ரிலீஸ். நாளைதான் என்று அறிவிச்சு இருக்காங்க.

பியார் பிரேமா காதல் படம் நாளை திரைக்கு வரவிருந்த நிலையில் தற்போது தள்ளிப்போயுள்ளது. படம் ஒரு நாள் கழித்து ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவால் தமிழக மக்கள் துயரத்தில் இருப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதே நாளில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் ஹரிஷ் மற்றும் ரைசா நடித்துள்ள இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!