இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆலியா….? கார் டிரைவர், உதவியாளருக்கு 50 இலட்சத்தில் வீடு…

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட், தனது 26 -வது பிறந்த நாளில், தமது டிரைவர் மற்றும் உதவியாளருக்கு ரூ.50 லட்சத்தில் வீடு வாங்கி கொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகை ஆலியா பட், அவரது நடிப்பு திறனுக்காகவும் பாராட்டுக்களை குவித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய 26வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு, பாலிவுட் பிரபலங்கள் பலரும் வந்து சிறப்பித்தனர்.

மேலும் தனது பிறந்த நாளையொட்டி தனக்கு நீண்டகாலமாக கார் டிரைவராக இருக்கும் சுனில் மற்றும் உதவியாளராக இருக்கும் அன்மோல் ஆகியோருக்கு சொந்த வீடு கட்டிக்கொள்ள ஐம்பது லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கியுள்ளார். இதனால், இவர்கள் இருவரும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ஆலியாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Sharing is caring!