இப்படி நடந்திருக்குமா என்பது ஆச்சரியம்

எந்த ஒரு திரையுலகத்திலும் இதற்கு முன்பு இப்படி நடந்திருக்குமா என்பது ஆச்சரியம் தான். கணவன், மனைவியான நாகசைதன்யா, சமந்தா ஆகியோர் நடித்த மூன்று படங்கள் ஒரே நாளில் வெளியாகி போட்டி போட்டு மூன்றுமே வெற்றி பெற்றுள்ளன.

நாகசைதன்யா, அனு இமானுவல், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்த ‘ஷைலஜா ரெட்டி அல்லுடு’, சமந்தா நடித்த ‘யு டர்ன், சீமராஜா’ ஆகிய படங்கள் கடந்த வாரம் வெளியாகின. இந்த மூன்று படங்களுமே எதிர்பார்ப்புகளையும் மீறி நல்ல வசூலைப் பெற்று வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விமர்சன ரீதியாக சில பல நெகட்டிவ் கருத்துகள் வந்தாலும், அதையும் மீறி இந்தப் படங்கள் வசூலிப்பதால் கண்டிப்பாக நஷ்டம் வராது என்கிறார்கள்.

இதில் நாகசைதன்யா, சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் அவர்கள் நடித்து வெளிவந்த படங்களில் அதிகப்படியான வசூலை இப்போது பெற்றிருக்கிறார்கள். சமந்தா நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த ‘யு டர்ன்’ இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

தங்கள் படங்கள் ஒரே நாளில் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளதால் சமந்தா, நாகசைதன்யா சந்தோஷத்தில் இருக்கிறார்களாம். இந்த வெற்றியைக் கொண்டாட விரைவில் வெளிநாடு பறக்க இருப்பதாகவும் தகவல்.

Sharing is caring!